எப்படி என்று தெரியாது
நான் கல்லாகிப் போனது.
அப்படியேதான் மரமாகிக் போனதும்.
முகம் வாடி பொலிவிழக்கும்போது
மலர் மலர்ந்து மட்டும் மணக்கப்போவதில்லை.
நதிநீரின் அசைவை
நான் அறிந்ததில்லை.
கதிரவனோ நிலவோ அது என்
வட்டத்திற்கு வெளியே
வந்து போகலாம்.
அப்படியென்றால்.....?
சொல்கிறேன் கேள்!
தூர தேசத்திலிருந்து உன்
வாசம் சுமந்து வரும்
காற்று என் தூதுவன்.
மரண ஓலமிட்டு தன்கிளை பிரியும்
சறுகுகள்தான் என் தோழிகள்.
காலை எனது நம்பிக்கை.
மாலைதான் எனது எதிரி.
எப்படி சொல்வதென்று தெரியவில்லை.
விரைந்து வா காதலனே!
வீணாய் கழிகிறது காலம்.
super
ReplyDeleteWELL SAID......
ReplyDelete