சென்னை புத்தகக் கண்காட்சி வேலைகளை முடித்துக்கொண்டு சினிமா பக்கம் நேற்றுதான் திரும்ப முடிந்தது. சரி முதலில் எனது இயக்குநர் லிங்குசாமியின் வேட்டையை பார்த்துவிடுவதென முடிவெடுத்து சென்றேன். படம் ஆரம்பித்தது முதல் முடியும் வரை ஒரே சீராக, அதே சமையம் பரபரப்பாக , நாம் சிட்டி ட்ரெயினுக்கு நிலையத்தில் காத்திருக்கும் போது, அங்கு நிற்காமல் அசுர வேகத்தில் அதிவேக எக்ஸ்பிரஸ் கடக்து மறையும்படியான காட்சிகளினால் படம் முடிந்த பிறகுதான் என்ன கதை, யார் இயக்குநர், ஒளிப்பதிவு , இசையெல்லாம் யார் என்ற சிந்தனையெல்லாம் வருது. தற்கால இந்தியாவின் பொருளாதாரப் பிரச்சினையை படம் எப்படி அலசுகிறது போன்ற எதிர்பார்ப்பு ஏதுமின்றி வெறுமனே பொழுதுபோக்குக்காக உள்ளே நுழைந்தால் படம் அருமை! அனைவரும் ரசித்துவிட்டு வரலாம். காட்டிக்கு காட்சி அழகான - லாவகமான வசனங்கள் அருமையாக பொருந்திவிடுகிறது. மாதவன் - ஆர்யா ஒரு பக்கம் என்றால், அமலாபால் -சமீராரெட்டி என மற்றொரு பக்கம் அட்டகாசப் படுத்துகின்றனர்.
No comments:
Post a Comment