“ஓர் ஊரில் ஒரு மனிதர் இருந்தார். அவர் நிறைய பாவங்களை செய்ததால், நரகப் படுகுழி என்கிற கிணற்றில் விழுந்து விட்டார். அந்த கிணற்றில், ஏற்கெனவே பாவம் செய்தவர்கள் விழுந்து கிடந்தார்கள். உள்ளே ஏகப்பட்ட சத்தம். இப்பொழுது விழுந்த அந்த மனிதரின் சத்தம் கொஞ்சம் அதிகமாக இருந்தது.
அந்தக் கிணற்றுக்கு பக்கத்தில் ஒரு மகான் இருந்தார். இந்த மனிதர் போடுகின்ற சத்தம் அதிகமாக கேட்டதும், கிணற்றை எட்டிப் பார்த்தார் அந்த மகான். மகானை பார்த்தவுடன், அந்த மனிதர், “சுவாமி! என்னைக் காப்பாற்றுங்கள்” என்று கத்தினார். அந்த மனிதரைப் பார்த்ததும், மனித சமுதாயத்திற்கு அந்த மனிதர், என்னென்ன கெடுதல் செய்திருக்கிறார் என்ற விவரம் மகானின் கண் முன்னே தெரிந்தது. இருந்தாலும், அந்த மனிதரைக் காப்பாற்ற ஏதாவது வழி உண்டா என்று யோசித்தார்.
ஏதாவது ஒரு நல்ல காரியத்தை அந்த மனிதர், தனது வாழ் நாளில் செய்திருக்கிறாரா என்று பார்த்தார். ஒரு சமயம், அந்த மனிதர் தன் காலடியில் மிதிபட இருந்த சிலந்தியை, தன்னை அறியாமல், மிதிக்காமல் தாண்டி போயிருந்தது தெரிய வந்தது. இந்தச் செயலுக்காக,
அந்த மனிதரை கரையேற்ற முடியுமா என்று சிந்தித்தார். உடனடியாக, அவர் கையில் சிலந்தி ஒன்று வந்து நின்றது. அதனிடமிருந்து, நூலிழை வெளிவர ஆரம்பித்தது. அந்த நூல் இழை, கிணற்றின் ஆழம் வரைக்கும் நீண்டு கொண்டே போயிற்று. உடனே அந்த மகான், கிணற்றில் இருந்த மனிதரைப் பார்த்து, “இந்த நூலைப் பிடித்துக் கொண்டு மேலே ஏறி வா” என்றார்.
இதற்கு அந்த மனிதர், “சிலந்தி நூல், என்னைத் தாங்குமா?” என்று கேட்டார். “எல்லாம் தாங்கும். அதைப் பிடித்து வா” என்றார் மகான். சந்தேகத்துடனேயே அந்த நூலிழையை பிடித்து இழுத்துப் பார்த்தார் அந்த மனிதர். நூலிழை வலுவாக இருந்தது. எனவே, அதைப் பிடித்துக் கொண்டு மெதுவாக ஏறி வர ஆரம்பித்தார். பாதி தூரம் வந்தவுடன், அந்த மனிதரின் காலுக்கு கீழே கொஞ்சம் சத்தம் கேட்டது. கீழே குனிந்து பார்த்தார் அந்த மனிதர். வேறு சிலரும், அந்த நூலிழையை பிடித்துக் கொண்டு மேலே வந்து கொண்டிருந்தார்கள். உடனே அந்த மனிதருக்கு கோபம் வந்தது. தன் இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து, தன் காலுக்கு கீழே உள்ள நூலிழையை வெட்டிவிட்டார். இனிமேல், தான் மட்டும் மேலே ஏறிவிடலாம் என்று நினைத்தார் அந்த மனிதர்.
ஆனால் நடந்தது என்ன தெரியுமா? மொத்த நூலிழையும் அறுந்து விழுந்தது. அந்த மனிதரும் பொத்தென்று கீழே விழுந்துவிட்டார். மறுபடியும் கத்த ஆரம்பித்தார். ஏற்கெனவே தன்னை அறியாமல், அந்த மனிதர் செய்த ஒரு நற்செயல், அந்த நூலிழைக்கு உறுதியைக் கொடுத்தது. இப்போது அவர் செய்த பாவம் அந்த நூலிழையை வலுவிழக்கச் செய்துவிட்டது. அடுத்தவர்களும் வாழ வேண்டும் என்ற எண்ணம் அந்த மனிதருக்கு இருந்திருந்தால், அந்த மனிதர் கரையேறியிருப்பார். ஆனால், அவர் அதைச் செய்யவில்லை. எனவே அதல பாதாளத்தில் வீழ்ந்து விட்டார் அந்த மனிதர். திரைப்படத் துறையால், தானும், தன் குடும்பமும் மட்டும் செழிப்படைய வேண்டும் என்று நினைத்தவர்கள் இந்த நிலைமையில் தான் இன்று இருக்கிறார்கள்” என்றார்.
நல்லாத்தான் இருக்கு கதை... குட்டிக் கதை...!
ReplyDeleteஎனக்கும் படிக்கும்போது அட நல்லாருக்கே என்பது போலத்தான் இருந்தது..
ReplyDeleteஇந்தக் கதையில் குற்றம் உள்ளது. சிலந்தி, நூலைக் கீழே அனுப்பமுடியாது. அப்படிச்செய்ய வேண்டுமாயின் அந்தச் சிலந்தியும் கீழே போகவேண்டும். இது எம்.ஜி.ஆர்., வைக்கோ காலத்துக்குப் பிந்தி என்று தெரிகிறது. ஏனென்றால் அந்த மனிதர் அவர்களை வெட்டிவிட்ட அப்புறமும் கரையேறி இருக்கிறார். என்றால், அவர்கள் எல்லாம் வெட்டிவிடப்பட வேண்டியவர்களே என்றாகிறது!
ReplyDeleteஅல்லது...?