நல்ல புத்தகங்கள்

நல்ல புத்தகங்கள் உலகை உங்களுக்கு இன்னும் நெருக்கமாக்கும்

Thursday, February 11, 2010

இன்னொரு சபதம்

இனி ஒருபோதும் உன்னை தொடப்போவதில்லை.

நீ இருக்கும் பக்கம் தலைவைத்தும் படுக்கப்போவதில்லை.

எனக்குள் இற்ங்கி என்னை

முழுமையாக ஆக்ரமித்துக் கொண்டது

இனி ஒருமுறை வேண்டாம்.

இரவெல்லாம் உன்னை தூக்கி சுமந்த வலி

விடியலில் வேண்டவே வேண்டாம்.

இசைக்காத உனது மகுடியில் மயங்கி

மாலைதோரும் கைகள் நடுங்கியபடி வரப்போவதில்லை.

உன் பசப்பு மயக்கம் இனி செல்லாது.

நாம் முயங்கிப் பிரிந்த பின்

நமது மிச்சங்களை

வாசணை பாக்குகளால் கூட மறைக்க முடிவதில்லை.

ஒன்று சொல்கிறேன் கேட்டுக்கொள்.....

இதையே எனது கடைசிக் கடிதமாக ஏற்றுக்கொள்வாய்

என்று நம்புகிறேன். இல்லையென்றால்

இதுவே உனக்கு எச்சரிக்கையாகட்டும்.

திருவிழா காலங்களில் ஊர் சாவடியிலோ...

திருமண வீட்டின் மொட்டை மாடியிலோ...அல்லது

விஷேசமற்ற காரணங்களுக்கு கூட

ஒன்று கூடிவிடும் நான்கு நண்பர்கள் மத்தியிலோ

உன்னை எதேச்சையாக சந்திக்க கூடும்... அப்போது,

`ஒரே ஒருமுறை மட்டும்’` இதுவே கடைசி முத்தம்’- என்று

மீண்டும் ஒரு ஆரம்பத்திற்கு மட்டும்

வித்திடாமல் இருந்தால் போதும். மற்றபடி

உன்னை விரும்பி-தேடி

வரப்போவதில்லை எனும் அளவிற்கு

மன உறுதிமிக்கவன் நான்

2 comments:

  1. நல்ல சபதம் வாழ்த்துக்கள் ...!வேடியப்பன்

    ReplyDelete
  2. //இன்னொரு சபதம்//

    வேடியப்பன்,

    ”குடிகாரன் பேச்சி விடிஞ்சா போச்சி” கண்ணு.

    நல்லதொரு சிலேடை. தொடர்ந்து எழுதுங்கள்.

    வாழ்த்துகள்.

    ReplyDelete