இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட எம்.பியுமாக உள்ளவர் சுரேஸ் பிரேமச்சந்திரன். சென்னை வந்த அவர் சில புத்தகங்கள் வாங்கும் பொருட்டு நமது டிஸ்கவரி புக் பேலஸ்- கு வந்திருந்தார். அவருடன் இலங்கை நிலவரங்களை பற்றி உரையாடியதில் “எனது வருத்தம் அங்குள்ள உண்மையான நிலவரங்கள் தமிழக தலைவர்களுக்கு தெரிந்திருந்தாலும் கூட அதை பேசாமல் இன்னும் “தலைவன் வருவான் தனி ஈழம் மலரும்”- என்று மட்டுமே பேசுவசுதுதான். இதனால் அங்குள்ள இன்றைய தமிழர்களுக்கு என்ன பயன் என்று பார்க்க வேண்டும்.
தலைவன் வரவேண்டும் என்பது அனைவரின் அவாதான். ஆனால் அதற்குள் நடந்து முடிந்திருக்கும் இன அழிப்பு மாற்றங்களை யார் தடுத்து நிறுத்துவது - என்று வருத்தத்துடன் கூறினார்.
No comments:
Post a Comment