சரஸ்வதி பத்திரிகையை 1955ல் துவங்கியவரும், சோவியத்நாடு பத்திரிகை ஆசிரியர் குழுவின் ஆசிரியர்களில் ஒருவருமான தோழர் விஜயபாஸ்கரன் அவர்களுக்கு புகழாஞ்சலி கூட்டம் சென்னையில் கே.கே.நகர் டிஸ்கவரி புத்தகக்கடையில் நடைபெற்ரது. நிகழ்வுக்கு யுகமாயினி இலக்கிய இதழாசிரியர் சித்தன் தலைமை வகித்தார். எழுத்தாளரும், விஜயபாஸ்கரனின் சகோதரருமான வ.மோகனகிருஷ்ணன் அறிமுக உரையாற்றினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எழுத்தாளர்கள் திருப்பூர் கிருஷ்ணன், சிகரம் செந்தில்நாதன், எம்.ஜி.சுரேஷ், பாரதிகிருஷ்ணகுமார், சௌரிராஜன், விஜயமகேந்திரன், அம்பத்தூர் ஆர்.துரைசாமி, கே.பன்னீர்செல்வம், தென்சென்னை மாவட்ட செயலாளர் எஸ்.ஏழுமலை, இசக்கிமுத்து, ஏ.ஏ.எச்.கோரி, தாழைமதியவன், குலசேகர்,மற்ரும் விஜயபாஸ்கரனின் சகோதரி குடும்பத்தினர், இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்று அவரது வாழ்வின் நிகழ்வுகளை நினைவுகூர்ந்தனர்.
சரஸ்வதி காலம் என்னும் மணிக்கொடி காலத்திற்குப்பின்பு, முற்போக்கு இடதுசாரிச் சிந்தனை, அழகியல் குறித்து விவாதித்து அவரது இலக்கியசாதனைகளை புகழஞ்சலி செலுத்தினார்கள்.
மூத்த இலக்கியவாதி தி,க,சி அவர்கள் விஜயபாஸ்கரன் குறித்தான நினைவுகளை கட்டுரையாக எழுதி அனுப்பியிருந்ததையும், திருச்சி உயிரெழுத்து இதழாசிரியர் சுதீர்செந்தில், தஞ்சை சௌந்திரசுகன் இதழாசிரியர் சுகன் அனுப்பியிருந்த அஞ்சல் கடிதங்களையும் திரு.சித்தன் வாசித்தார். திகசியின் கட்டுரை அமர்வில் விஜய்பாஸ்கரன் மீதான ஒரு முழுமையான தோற்றத்தை அளித்தது. இலக்கிய உலகில் வருங்கால தலைமுறை விஜயபாஸ்கரனின் வரலாற்றை தெரிந்து கொள்ளும் வகையில் சில தகுந்த திட்டங்களை செயல்படுத்திட வேண்டும் என ச.செந்தில்நாதன் அமர்வில் முன்வைத்தார்.
www.classiindia.com Best Free Classifieds Websites
ReplyDeleteIndian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com