நல்ல புத்தகங்கள்

நல்ல புத்தகங்கள் உலகை உங்களுக்கு இன்னும் நெருக்கமாக்கும்

Saturday, August 18, 2012

ரா. கி. ரங்கராஜன் மறைவு

ரா. கி. ரங்கராஜன் (பி. 1927) ஒரு  பிரபலமான தமிழக எழுத்தாளர் மற்றும் இதழாளர். வரலாற்றுப் புதினங்கள், குற்றக் கதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என பல பாணிகளில் பல நூலகளை எழுதியுள்ளார்.

ரங்கராஜன் கும்பகோணத்தில் பிறந்தார். இவரது தந்தை ஆர். வி. கிருஷ்ணமாச்சாரி ஒரு சமசுகிருதப் பண்டிதர். சக்தி, காலச் சக்கரம், கல்கண்டு போன்ற இதழ்களில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய ரங்கராஜன், 1947 முதல் 42 ஆண்டுகள் குமுதம் இதழில் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார். இவர் பல புனைப்பெயர்களில் எழுதியுள்ளார். சூர்யா, ஹம்சா, துரைசாமி, கிருஷ்ணகுமார், மாலதி, வினோத் ஆகியவை அவற்றுள் சில. நான் கிருஷ்ணதேவராயன் இவரது குறிப்பிடத்தக்க வரலாற்றுப் புதினம். ஹென்றி ஷாரியரின் பாப்பிலான் (பட்டாம்பூச்சி), சிட்னி ஷெல்டனின் இஃப் டுமாரோ கம்ஸ் (தாரகை), தி ஸ்டார்ஸ் ஷைன் டவுன் (லாரா) மற்றும் ரேஜ் ஆஃப் ஏஞ்சலஸ் (ஜெனிஃபர்); ஜெஃபிரே ஆர்ச்சரின் எ டுவிஸ்ட் இன் தி டேல் (டுவிஸ்ட் கதைகள்) டேனியேல் ஸ்டீலின் காதல் மேல் ஆணை ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்புகள். கிருஷ்ணகுமார் என்ற பெயரில் அமானுஷ்ய  கதைகளும் , டி. துரைசாமி என்ற பெயரில் உண்மைக் குற்றங்களின் அடிப்படையில் குற்றக் கதைகள், வினோத் என்ற பெயரில் தமிழ்த் திரைப்பட செய்திக் கட்டுரைகள் (லைட்ஸ் ஆன் வினோத்) என பலவித படைப்புகளை எழுதியுள்ளார். இவற்றுள் பல குமுதம் ஆனந்த விகடன் முதலான இதழ்களில் தொடர்களாக வெளிவந்தன.
தேர்ந்தெடுக்கப்பட்டவை “நாலு மூலை” என்ற பெயரில் நூலாக வெளியாகியுள்ளன. ”அவன்” என்ற பெயரில் தன் வரலாற்றையும் எழுதியுள்ளார்.


2 comments:

  1. :-(
    குமுதத்தில் இந்த படைப்புகளை ஆர்வத்துடன் படித்து இருக்கிறேன்.

    ReplyDelete
  2. வணக்கம் திரு வேடியப்பன்.

    நான் ரஞ்சனி நாராயணன். எனது முதல் வருகை இது. நானும் திரு ரா.கி. ரங்கராஜன் (http://wp.me/p244Wx-jY) பற்றி ஒரு பதிவு அவருக்கு அஞ்சலியாக எழுதியிருக்கிறேன்.
    நேரம் கிடைக்கும்போது படித்துப் பார்க்கவும்.
    நன்றி,
    ரஞ்சனி

    ReplyDelete