“பரதேசி” விமர்சனம்!
கதை களம். ஆரம்பகால
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பற்றியது. 1930 களில் வறுமையில் வாடும் கிராமங்களைச் சேர்ந்த
ஆண்களையும் பெண்களையும் எவ்வாறு ஆசைவார்த்தை சொல்லி தேயிலைத் தோட்டத்திற்கு
அழைத்துச் செல்லும் கங்காணிகள், பிறகு அவர்களை எப்படி கொத்தடிமைகளாக மாற்றினார்கள், அவர்களின்
வாழ்வு அங்கேயே எப்படி சிதைந்துபோனது என்று விவரிக்கிறது.
எரியும் பனிக்காடு என்ற நாவலை மையமாக வைத்து எடுக்கப் பட்ட உண்மைக்கதை என்றாலும், முதல்
பாதியைப் பொருத்தவரை வெறுமனே நம்மை தாயர்
படுத்தும் வேலைமட்டும்தான். இரண்டாம்
பகுதியில்தான் மொத்த படத்தையும் திரும்பிப் பார்க்க வைக்கும் வேலை நடக்கிறது. நம்மை அந்தக் காலத்திற்கே அழைத்துச்
சென்றுவிடுகிறார் இயக்குநர் பாலா. நடிகர்கள் தங்களின் பங்களிப்பை மிக அருமையாக
செய்துள்ளனர். செழியனின் ஒளிப்பதிவு பக்கபலமாக பயணிக்கிறது. தமிழ் சினிமா ஒரு பெரிய மரம் என்றால் அதில் “பரதேசி” மரத்தின்
நடுவில் உள்ள வைரம் பாய்ந்த பகுதி எனலாம். கொஞ்சம் கொஞ்சமாக நம்மை உருக்கி உருக்கி
கடைசியில் நம் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீரை பொசுகென்று
வரவழைத்துவிடுகிறார்கள். அது நாம் இன்று குடிக்கும் தேனீருக்காக அன்று ரத்தம் சிந்தியவர்களுக்கு
அஞ்சலி செலுத்தியாக அமையட்டும்!
இன்னும் சில பல வருடங்களுக்கு தமிழ் பட இயக்குநர்கள் யாரும்
எடுக்கத் துணியாத வகை. இந்தப் படம் தமிழ் சினிமாவிற்கு உலக அளவில் புதிய அடையாளத்தை கொடுக்கும் என்று நம்புகிறேன்!
பல விருதுகளை குவிக்கப் போகும் படம் என்றாலும், இது விருதுகளுக்கு அப்பார்ட்பட்டது.
இனிமேல் தான் பார்க்க வேண்டும்... நன்றி...
ReplyDelete