அணிலாடும் முன்றில் / Anilaadum munril/ Na.muthukumar/ நா.முத்துகுமார்
நேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமி இலக்கிய உலகிலும் திரைத்துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துகுமார்.
கூட்டுக் குடும்பங்கள் முற்றிலுமாக சிதைந்து வரும் இன்றைய கால கட்டத்தில் குடும்ப உறவுகளின் உன்னதமான பண்புகளை இந்த நூலில் வடித்திருக்கிறார் கவிஞர்.
கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் ஆனந்தம் எல்லை இல்லாத்தது. பொருளாதாரப் புயலில் சிக்கிச் சிதைந்த குடும்பங்கள், தனித்தனிக் குடும்பங்கள் ஆன பிறகு மீண்டும் தங்கள் பழைய உறவுகளை நினைத்து ஏங்கி தவித்துக் கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
இப்படி அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என உறவு விழுதுகளை தாங்கி நிற்கும் ஒரே ஆணி வேர் - அன்பு! இதன் அடிப்படையில், குடும்ப உறவுகளில் நிகழ்ந்த வாழ்வியல் உணர்வுகளை நவீனத் தமிழ் நடையில் அனுபவக் கட்டுரைகளாகச் செதுக்கி இருக்கிறார். ஆனந்த விகடனில் தொடராக வந்தபோது, மனம் நெகிழப் படித்த வாசகர்கள் பலர், தங்கள் உறவுகளைத் தேடிச் சென்ற அனுபவங்களை கடிதங்கள் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும், ஆனந்தக் கண்ணீர்விட்டுப் பதிவு செய்திருக்கின்றனர். தமிழ் இலக்கிய உலகில் குடும்ப உறவுகளைப் பற்றிய முழுமையான ஆவணமாக வெளி வந்திருக்கிறது இந்த நூல்.

No comments:
Post a Comment