நல்ல புத்தகங்கள்

நல்ல புத்தகங்கள் உலகை உங்களுக்கு இன்னும் நெருக்கமாக்கும்

Sunday, July 24, 2011

வேலுநாச்சியாரும் வேலுப்பிள்ளை பிரபாகரனும்


  



கடந்த ஞாயிறு  காமராஜர் அரங்கில் மாலை 5 மணிக்கு வேலுநாச்சியார் நடன நாடகம்  என்று அனைத்து பத்திரிக்கையில் விளம்பரம் பார்த்திருக்கலாம். இதில் அனைவரும் வருக! என்ற வாசகம் என்னை ஈர்த்தது.  ஆர்வம் மேலிட ஆஜராகிவிடேன்.


வைகோ தான் இந்த நாடக ஆரங்கேற்றத்தின் சூத்திரதாரியாக இருந்து அனைத்து பொருட் செலவையும் ஏற்றுள்ளார். ஒவ்வொரு அரங்கேற்றத்திற்கும் குறைந்தது 5 இலட்ச ரூபாயாவது செலவாகலாம். சரி இப்போது  


இந்த நாடகத்தின் தேவை என்ன?, தேவை  இருக்கிறது.  அரங்கத்தில் நுழைந்துவிட்டால, வெளிஉலகில் நடக்கும் அனைத்து அட்டூலியங்கலையும் மறந்துவிடலாம். மானமும் வீரமும் மரக்கா எவ்வளவு என்று கேட்கும் சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது தெரியும்.  அங்கு ஸ்பெக்ட்ரம் பிரச்சினையோ, பெட்ரோல் விலை உயர்வோ இல்லை, முழுக்க முழுக்க கி.பி.1750 களுக்கு சென்றுவிடுகிறோம். வேலு நாச்சியார் என்ற  பெண்ணின் வீரம் மட்டுமே தெரியும். மறந்து போன தமிழனின் வீர வரலாறும் திரும்ப வாசிக்கப் படுவது மட்டுமே கேட்கும். தன் கணவனை சூழ்ச்சியால் கொன்று சிவகங்கையை கைப்பற்றிய  வெள்ளையர்களை எதிர்த்து தாயகத்தை மீட்க தனிப்படையை அமைத்த முதல் வீரப் பெண் வேலுநாச்சியார். சுற்றியுள்ள தனித்தனி குறுநில மன்னர்களை ஒன்றாக்கியதுடன், ஹைதர் அலியை சந்தித்து படை உதவு கோரினார். எட்டு மொழியினை சரளமாக தெரிந்து வைத்திருந்த வேலுநாச்சியாரின் உருது மொழி புலமையை கண்ட ஹைதர் அலி மகிழ்ச்சியோடு 5000 குதிரைப் படையையும், ஒரு பீரங்கிப் படையையும் அனுப்பி வைத்தார்.    அவர்தான் உலகின் முதல் மனித வெடிகுண்டை தயாரித்து வெள்ளையனின் ஆயுதக் கிடங்கை அழித்தார். மருது சகோதர்ர்களின் துணையோடு மொத்தபடையையும் ஒன்றாக்கி சிவகங்கையை மீட்டுடார். 






தன்கணவனை கொன்ற வெள்ளைத் தலபதி உயிருக்கு பயந்து மன்னிப்பு கேட்கவும் மன்னித்து விட்டிருக்கிறார். இந்த வீரத்தை 200 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது ஈழப்போராட்டத்தில்தான் நாம் காணமுடிகிறது. வரலாறு திரும்பி இருக்கிறது. இப்படிப்பட்ட வீர மரபில் வந்த நாம்தான் இப்படி அமைதியாக கிடக்கிறோமா? என்று நாடகம் கேள்வி எழுப்புகிறது. வேலுநாச்சியார் என்பது இங்கு வேலுப்பிள்ளை பிரபாகரனே என்று வெளிப்படையாக பேச வைக்கிறது நாடகத்தின் தாக்கம்.
                             ஒவ்வொரு காட்சியின் முடிவிலும் எழுப்பப் படும் கைத்தட்டல்கள் இன்னும் நாடக வடிவம் மக்களை விட்டு நீங்கிவிடவில்லை       
                                         என்ற நம்பிக்கை தருகிறது.
       

                              முக்கியஸ்தர்களாக  கலந்துகொண்ட நடிகர் சிவக்குமாரும், இளையராஜாவும் நாடகத்தை     பார்த்து வியந்துபோனார்கள்.