நல்ல புத்தகங்கள்

நல்ல புத்தகங்கள் உலகை உங்களுக்கு இன்னும் நெருக்கமாக்கும்

Wednesday, October 2, 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் -பற்றி

       

                                                                  “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்”


                                                                                           


     நேற்று இரவுக் காட்சியில் எப்படியும்ஓநாயும் ஆட்டுக்குட்டியும்பார்த்துவிட வேண்டும் என்ற முடிவோடு இரவு 10 மணிக்கு பிரேம் நேஷ்னல்  மால் வாசலில் நின்றேன். என்னால் யூகிக்கவே முடியாத கூட்டமாக இருந்தது. உள்ளே வண்டிகள் நுழையவே முடியாத அளவு கூட்டம். பைக்கை வெளியே நிறுத்திவிட்டு முதல்ல டிக்கெட் வாங்கிவிடலாம் என்ற முடிவோடு போனேன்.  பெருங்கூட்டத்தில் டிக்கெட் கிடைக்காமல் திரும்பினேன். சரி படம் பார்த்தே ஆகவேண்டிய எனது  கட்டாயமான மனநிலைக்கு எந்த காரணமும் எடுபடவில்லை.  பக்கத்தில் உள்ள தேவி கருமாரி தியேட்டருக்கு ஓடினேன். இது ஸ்டார் ஹோட்டல்ல ரூம் கிடைக்கலைனா ப்ளாட்பாரத்தில படுக்கிறமாதிரியான வேறுபாடு. ஓடினேன் ஓடினேன்.. தியேட்டரை நெருங்கவே முடியவில்லை. வழியிலேயே அவ்வளவு டிராபிக். படம்பார்த்துவிட்டு திரும்பி வருக் கூட்டம் இது. அப்போதே இங்கையும் பார்க்க முடியாதோ என்ற டவுட் வந்திருச்சு. உள்ளபோய் வண்டிய பார்க் பண்றதுக்குள்ள போதும் போதும் என்றாகிவிட்டது.  ஒருவழியாக அடித்துப் பிடித்து ஓடிவந்து டிக்கெட் கவுண்டரில் நின்றால்  அங்கையும் டிக்கெட் இல்லை கதைதான்.  டிக்கெட் இலைன்னா எதுக்கு இவ்வளவு கூட்டம். அப்படி என்னத்தைதான் வாங்கிட்டு இருக்காங்கனு பார்த்தா அவ்ளோ நேரத்திக்கும் முன்பதிவு வேலையை ஆரம்பிச்சிட்டாங்க.  வேறு வழியில்லாமல் முன்பதிவு செய்துகொண்டிருந்த கூட்டத்திலிருந்து வெளியே வந்த ஒருவன்  டிக்கெட்டை எடுத்துக் கொண்டு தியேட்டருக்குள் நுழைய முயன்றார். அவரை மடக்கி விசாரித்ததில் அது  “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்படத்திற்கான டிக்கெட்டுதான். ஆஹா முழிச்சுக்குடா கைப்பிள்ளை என்பதுபோல நேராக ஆபிஸ் ரூமுக்கு ஓடினேன். எனது இயக்குநர் சங்க உறுப்பினர் அட்டையை காட்டி  “சார் டைரக்டர் யூனியன் மெம்பர், இந்தப் படத்தில வேலை செய்திருக்கேன், இதோ பாருங்க ,” என்று உறுப்பினர் அட்டையை காட்டி “ஓநாயும் ஆட்டுக்குட்டியும் -கு  ஒரே ஒரு டிக்கெட் மட்டும்என்றேன்.  எந்தமறுப்பும் இல்லாமல் 60 ரூபாயில் டிக்கெட் கையில் வந்தது. தியேட்டருக்குள் சென்று எனக்கான இருக்கையில் அமர்ந்தேன். உள்ளே ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் போலத்தான். சரி இன்னைக்கு படம் பார்த்த மாதிரிதான் என்பது போலத்தான் மனநிலை..  பாதிபேருக்கும் மேல் பொதையில் இருந்தார்கள். அப்படியே பட்டிக்காட்டு ஓலைக்கொட்டைகை எபெக்ட்டில் விசில் சத்த வேரு காதைப் பிளந்தது.  கதை, திரைக்கதை,  முன்னணி இசை ( அப்படித்தான் டைடில் கார்டு போடுகிறார்கள்)  என்று  அமைதியாக படம்பார்க்கலாம் என்று புறப்பட்டவனுக்கு இப்படி வந்து மாட்டிகிட்டமே என்பது போன்ற மனநிலை.. அனைவராலும் பாராட்டப் படும் ஒரு படத்தை கூச்சல், குடி  என்று இப்படி நாரடிக்கிரார்களே என்று  நோகாமல் இருக்க முடியவில்லை, ஒருவழியாக படம் தொடங்கியது.
  மிஸ்கின் சுடப்பட்டு விழும் முதல் காட்சியில் ஆரவாரமாகவும், கெக்களிப்போடும் பெரும் சத்தமாய் நிறைந்திருந்த திரையரங்கம்.. அடுத்த ஐந்து நிமிடத்தில் அனைவரையும் பெட்டிப்பாம்பாக்கிக்கொண்டு அடங்கிவிடுகிறது. எல்லோரும் ஒரு வகையான மந்தமான மனநிலையில், பித்துபிடித்து மந்திரத்துக்கு கட்டுப் பட்டவர்களைப்போல மாறிவிடுகின்றார்கள். அவ்வளவு அழுத்தமாக முதல் காட்சியிலேயே பார்வையாளனுக்குள் கதையை வேகமாக ஊடுருவச் செய்துவிடுகிறார்.  ஒநாயும் ஆட்டுக் குட்டியையும் பொருத்தவரை கதையும், அதை சொல்ல எடுத்துக்கொண்ட திரைக்கதை வடிவமும் தமிழ் சினிமா பார்வையாளனுக்கு முற்றிலும் புதிது.  இதுவரை ஆரம்பத்தில் ஐந்து முதல் பத்து காட்சிகள் வரை, பார்வையாளனின் கையைப் பிடித்து மெதுவாக கதைக்குள் அழைத்துப் போவதுதைத்தான், ஒரு வைகயான மயக்க மருந்து கொடுக்கும் வேலையைச் செய்வதைப் போன்ற திரைக்கதையைத்தான் நாம் அனைவரும் பார்த்துப் பழகி இருகிறோம். ஆனால் தலாடடியாக , சும்மா வெருமனே நின்றுகொண்டிருந்தவனை காரின் பகவாட்டுக் கதைவைத் திறந்து உள்ளே இழுத்துப் போட்டு பயணிக்கும் கடத்தல்காரர்களைப்போல கதைக்குள் இழுத்துப்போட்டு பயணிக்க வைப்பதோடு, நம் தலையில் துப்பாக்கியை வைத்து எச்சரித்து நான் சொல்வதை மட்டும்கேட்டுக் கொண்டுவந்தால் போதும். உன் விளையாட்டுக்கு இங்கே இடமில்லை என்பது போல  நம்மை கப்சிப் ஆக்கிவிடுகிறார்.
  ஒரு பக்கம் இயக்குநராக மிஸ்கின் நம்மை அடாவடியாக கதைக்குள் கட்டிப்போட்டு வைக்க, மிகவும் மென்மையாகவும், அமைதியாகவும்  விசாரணையைத் துவங்கும் இளையராஜா, இருக்கும் கொஞ்சநஞ்ச  வெளி உணர்வுகளையும் மெதுவாக பரித்துக்கொண்டு திரைக்குள் ஒன்றவைத்துவிடுகிறார்.
ஒரு பரப்பான பிளாஷ்பேக் காட்சிகளை குழந்தைக்குச் சொல்லும் கதையாக மொத்த குழப்பத்திற்கும் விடைசொல்லும் மிஷ்கின் நடிகராகவும் நின்று, கிட்டத்தட்ட இரண்டு நிமிடத்துக்கும் மேலாக ஒரே காட்சியாக நீளும் அந்தக் காட்சியில் நம்மையும் கலங்கடித்துவிடுகிறார். உலகத் திரைப்படத்தை தமிழில் எடுப்பது ஒரு வகை, தமிழ்படத்தினை உலக அளவுக்கு எடுப்பது இன்னொரு வகை. “ஓநாயும் ஆட்டுக் குட்டியும்” இதில் இரண்டாம் வகை. இன்னும் பலகாலத்துக்கு இந்தப் படத்தை திரையுலகம் கொண்டாடும்.