நல்ல புத்தகங்கள்

நல்ல புத்தகங்கள் உலகை உங்களுக்கு இன்னும் நெருக்கமாக்கும்

Thursday, February 25, 2010

லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்

விமர்சனம்

புத்தகத்த படிச்சதும் உடம்புபூராவும் ஒரு உற்சாகம் ஜில்லுன்னு ஏறுது, ஏதோ திருவிழாகூட்ட்தில ``அந்தப்பக்கம் தனியாவா’’-ன்னு ஜாடைகாட்டிட்டு கூட்டத்தோட கூட்டமா மறைஞ்சிபோன அத்தைபொண்ண கோயில்மாடுமதிரி தெனவெடுத்து தேடுவமே... அப்படியொரு நினப்பு மனசுபூறா நிக்குது. அரகுற ஆடையோட நம்மள சுத்தி பத்து பதினஞ்சு மாடர்ன் பொண்ணுங்க விசிறி வீசுறாங்கலோன்னு நினைச்சு நம்மள நாம்மளே கிள்ளிபாத்துக்க தோனுது. முத்தம் கதை ஆரம்பிச்சதிலிருந்து முடியரவரைக்கும் கில்லி கிளைமாக்ஸ் மாதிரி ஓடுது... அந்தப்பெண்ணின் நிலையும் எதிர்பார்ப்பும் ஞாயமானதே.. லெமன் ட்ரீயும்.. ரெண்டு ஷாட் டக்கீலாவும் பத்தி என்னால் ஒன்னும் சொல்ல முடியல, ஏன்னா எதை எதல கலக்கனாங்க, எதை குடிச்சாங்கனு சரியாபுரியல, எனக்கு அந்த அனுபவம் கம்மி. அதே சமையம் அந்த கதைல உற்சாகம் ஏற- ஆட ஆரம்பிக்க- வாசிக்க- பாட்டு முடிய- என்று சினிமா டிஸ்கிரிப்சன் மாதிரியும் இருக்கு. என்னை பிடிக்கலையா? கதையில் எல்லாம் முடிஞ்சபிறகு ஹவுஸ் ஓனர் பொண்டாட்டி’என்னை- என் மனச-என் உணர்வை மதிக்கிற ஒருத்தனோட படுத்தது....’- என்று பேசற அந்த டயலாக் ரொம்ப பிடிச்சிருக்கு. அது உல்லாசதில் ஏற்பட்ட திருப்தில வர உண்மையான வார்தை. ஆண்டாள்,தரிசனம், மாம்பழ வாசணை, நண்டு, போன்ற கதைகள் முற்றிலும் விளையாட்டுத்தனம் அற்ற அக்கறையான எழுத்தாளனின் கதைக்களம். துரை.. நான்.. ரமேஷ் கதை சுவாரஷ்யமானது. 1காதல் 2க்ளைமாக்ஸ் கதை நல்ல டுஸ்ட். நல்ல கமர்சியல், எதிர்காலத்தில சினிமாவுக்கு பயன்படுத்தலாம், காமம்கொல் அற்புதமான தோலுரிக்கும் வேலை, வாழ்த்துக்கள். மற்ற கதைகளும் ஒவ்வொரு வகையில் என்னை கவர்ந்திருந்தாலும் டைப்பிங் பிரச்சனையால் அதிகமாக எழுதமுடியவில்லை. நேரில் கதைகளை பற்றி நிறையபேசலாம் என்று நினைக்கிறேன்.

Sunday, February 21, 2010

அழைப்பு..

நமது டிஸ்கவரி புக் பேல்ஸ்-ன் அடுத்த நிகழ்வாக இன்று 23-2-10
மாலை 5.30 மணிக்கு கலைவிமர்சகர் இந்திரன் அவர்களின் தலைமையில்
ஒரிய கவிஞர்களுடன் ஓர் உரையாடல்-என்ற தலைப்பில் ஒரிய கவிஞர்களுடன்
இலக்கியம் சார்ந்த சந்திப்பு நடைபெற உள்ளது. அனைவரும் வருக!

தொடர்புக்கு;டிஸ்கவரி புக் பேலஸ்
எண்-6. மஹாவீர் காம்ளக்ஸ்
முனுசாமி சாலை
கே.கே.நகர் மேற்கு
சென்னை-78
call.9940446650

இதனால் சகல பதிவர்களுக்கும் சொல்வது என்னவென்றால்.....

மதிபிற்குறிய பதிவர்களே, சமீபத்தில்
நண்பர் திரு.கேபிள்சங்கர் மற்றும் பரிசல் கிருஸ்ணா ஆகியோரின்
சிறுகதை தொகுப்புகளை நாகரத்னா பதிப்பகம் சென்ற 14-ம் தேதி சென்னை கே.கே.நகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸ்சில் வைத்து வெளியிட்ட்து அனைவரும் அறிந்ததே....! தற்போது நாகரத்னா பதிபகத்தின் மற்ற வெளியீடுகளையும் சேர்த்து அனைத்து புத்தகங்களையும் 10% முதல் 20% வரை கழிவுடன் விற்பனைக்கு வைத்துள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெறிவித்துக்கொள்கிரோம்

தொடர்புக்கு ,
டிஸ்கவரி புக் பேலஸ்
நம்பர் 6, மகாவீர் காம்ளக்ஸ்,முனுசாமி சாலை
மேற்கு கே.கே.நகர். (பாண்டிச்சேரி இல்லம் அருகில்)
அழைக்க;9940446650

Tuesday, February 16, 2010

விருப்பம்

சென்ற 14 ம் தேதி கேபிள் சங்கர் மற்றும் பரிசல் கிருஷ்ணா ஆகியோரின் நூல் வெளியீட்டுவிழா சிறப்பாக நடந்து முடிந்ததை அனைத்து பதிவாளர்களும்அறிவோம். சிறப்பு விருந்தினர்களே ஆச்சரியப்படும் அளவு பதிவாள்ர்கள் மிகவும் உற்சாகமிகுதியுடன் இருந்தனர். எனது விருப்பம் இந்த உற்சாகத்தை ஒன்று சேர்க்கவேண்டும் என்பதே. அதாவது, அனைத்து பதிவாளர்ளையும்ஒன்று சேர்த்துஅவர்களின் அனைத்து படைப்புகளையும் அச்சுஆவனமாக மாற்றி ஒரு பாதுகாப்பு அரணை உருவாக்கி ஒன்றினைத்து செயல்பட்டால் இன்னும் பல சாதனைகளை செய்யமுடியும். இதை நமது பதிவர்கள் யாரேனும் செய்ய முன்வந்தால் அதர்க்கான இடத்தையும் தேவைப்படும் மற்ற உதவிகளையும்கூட டிஸ்கவரி புக் பேலஸ் சார்பாக செய்துதர தயாராக உள்ளேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன், நன்றி.....

Thursday, February 11, 2010

இன்னொரு சபதம்

இனி ஒருபோதும் உன்னை தொடப்போவதில்லை.

நீ இருக்கும் பக்கம் தலைவைத்தும் படுக்கப்போவதில்லை.

எனக்குள் இற்ங்கி என்னை

முழுமையாக ஆக்ரமித்துக் கொண்டது

இனி ஒருமுறை வேண்டாம்.

இரவெல்லாம் உன்னை தூக்கி சுமந்த வலி

விடியலில் வேண்டவே வேண்டாம்.

இசைக்காத உனது மகுடியில் மயங்கி

மாலைதோரும் கைகள் நடுங்கியபடி வரப்போவதில்லை.

உன் பசப்பு மயக்கம் இனி செல்லாது.

நாம் முயங்கிப் பிரிந்த பின்

நமது மிச்சங்களை

வாசணை பாக்குகளால் கூட மறைக்க முடிவதில்லை.

ஒன்று சொல்கிறேன் கேட்டுக்கொள்.....

இதையே எனது கடைசிக் கடிதமாக ஏற்றுக்கொள்வாய்

என்று நம்புகிறேன். இல்லையென்றால்

இதுவே உனக்கு எச்சரிக்கையாகட்டும்.

திருவிழா காலங்களில் ஊர் சாவடியிலோ...

திருமண வீட்டின் மொட்டை மாடியிலோ...அல்லது

விஷேசமற்ற காரணங்களுக்கு கூட

ஒன்று கூடிவிடும் நான்கு நண்பர்கள் மத்தியிலோ

உன்னை எதேச்சையாக சந்திக்க கூடும்... அப்போது,

`ஒரே ஒருமுறை மட்டும்’` இதுவே கடைசி முத்தம்’- என்று

மீண்டும் ஒரு ஆரம்பத்திற்கு மட்டும்

வித்திடாமல் இருந்தால் போதும். மற்றபடி

உன்னை விரும்பி-தேடி

வரப்போவதில்லை எனும் அளவிற்கு

மன உறுதிமிக்கவன் நான்