நல்ல புத்தகங்கள்

நல்ல புத்தகங்கள் உலகை உங்களுக்கு இன்னும் நெருக்கமாக்கும்

Tuesday, August 16, 2016

ஜோக்கர் திரைப்படம் குறித்து

ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு நல்ல படம்னு சொல்லுவாங்களே, அந்தமாதிரிப்படம் இல்ல ஜோக்கர். அதையும் தாண்டி. யோவ்.. கிராமத்துல இருக்கிறவங்களுக்கு கக்கூஸ் போறது ஒரு பிரச்சினையான்னு நாம்ம சாதாரணமா விட்டரமுடியாது. கழிப்பறைங்கிறது நாகரிக வளர்ச்சிக்கானதா என்னவோ தெரியாது. ஆனா அது ஒவ்வொருவருக்குமான அடிப்படைத் தேவைன்னு சொல்லுது ஜோக்கர். ஏன்னா அதுக்கு நாம்ம கிராமத்தில வாழ்ந்து பாக்கனும். 8-ம் வகுப்பு படிக்கிறவரை பள்ளிக்கூடத்தில்கூட கழிப்பறை கிடையாது. சென்னைக்கு வந்து, சென்னைலயே திருமணம் செய்துட்டு போனதுக்கப்புறம்தான் கழிப்பறை கட்டற பேச்சையே எடுக்க முடிஞ்சதுங்கிறதுதான் அனுபவம்.



அப்படிப்பட்ட அத்தியாவசியத் தேவையான கழிபறைய முதல்ல கட்டு அதுக்கப்புறம் தாலியக் கட்டுன்னு ஒரு பொண்ணு சொல்லிட்டா நம்ம ஹீரோவுக்கு சொல்லவா வேணும். இவ்வளவுதானேன்னு யோசிக்கும்போதுதான் அரசாங்கமே கழிப்பறை கட்ட பணம் தராங்கிற தகவல் கேட்டு போறாரு. அங்கிருந்துதான் ஆரம்பிக்குது ஜோக்கர். இதுக்கப்புறம் நடக்கிற ஒவ்வொன்னுமே ஜோக்கர்தான். தப்பு பண்றவன் நல்லவன் - புத்திசாலி, தட்டிக்கேக்கிறவன் ஜோக்கர் - உதவாதவன்.
நம்ம கலைமரபுங்கிறது நாடகம். எப்பமே நாடகத்தில கட்டியக்காரங்கிறவன் அடி உதை வாங்கக் கூடிய ஜோக்கரா இருப்பான், அவன் வாயாலத்தான் குறைகளையும் சுட்டிக்காட்டும்படியாகவும் இருக்கும். அதுமாதிரிதான் இந்த ஜோக்கரும்.
ஒரு கழிப்பறை கட்டற போராட்டத்தில இந்தியாவோட அத்தன நிகழ்கால அரசியல் அட்டூழியங்களையும் தோலுரிச்சுக் காட்டும்போது தியேட்டரில் கைத்தட்டல்கள். எல்லாருக்குள்ளும் போராட்டவாதி இருக்கத்தான் செய்யறான். அதை கண்டு பிடிச்சு நமக்கு உணர்த்தும் வேலையை செய்த கையோடு நாளைக்கு ஒரு போராட்டாம் இருக்கு வீதிக்கு வான்னு அழைக்கும்போது நாம் உண்மையாவே போராட தயாராத்தான் இருக்கிறோம் என்ற உணர்வு.
அனைத்து கதா பாத்திரங்களும் நமக்கு பரிசயமான கிராமத்துக் காரர்களாகவே உணரவைப்பதிலும் ஜோக்கர் நிமிர்ந்து நிற்கிறது. அந்த வகையில் எழுத்தாளர், பதிப்பாளர், கதைசொல்லி பவா செல்லதுரை -யும் அட்டகாசப் படுத்தியுள்ளார்.
இயக்குநர் ராஜு முருகன் அவர்களுக்கு இதுபோன்ற ஒரு திரைப்படத்தைக் கொடுத்ததுக்காக நமது வாழ்த்துக்கள். கமர்சியலா ஜெயிக்கனும்னா கருத்து சொல்லக்கூடாதுங்கிற கோடம்பாக்கத்து இயக்குநர்களுக்கு புளிக் கரைச்சல் கொடுத்து அவர்களின் விரதத்தை முடித்து வைக்க வந்துள்ள ஜோக்கர் திரையுலகில் பலகாலத்துக்கும் நமக்கு பாடமாக, முன்மாதிரியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.






No comments:

Post a Comment